சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கின் விசாரணை நிலை என்ன?.. அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையை மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி தரப்பில், வழக்கின் விசாரணையை முடிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை முதலாவது கூடுதல் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆக. 29க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: