தஞ்சையில் காதல் திருமணம் செய்த எஸ்ஐக்கு வரதட்சணை கொடுமை கள்ளக்காதலியுடன் கணவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ்வேந்தன். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சசிரேகா(33). தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுகிறார். 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், கடந்த 2018ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் புகழ்வேந்தன், மனைவி சசிரேகாவை வரதட்சணையாக பணம் மற்றும் நகை வாங்கி வருமாறு கூறி அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிரேகா கொடுத்த புகாரில், கணவர் புகழ்வேந்தன், நூர்ஜகான்(35) என்பவரை 2வது திருமணம் செய்ய முடிவெடுத்தார். நானும் அதை ஏற்று இனி என்னிடம் வரவேண்டாம் என கூறிவிட்டேன். அதன் பின்னரும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தி வருகிறார்.

அவர் மீதும், அதற்கு தூண்டுதலாக உள்ள நூர்ஜகான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், ஏற்கனவே 3 பேரை மணந்த நூர்ஜகான் 4வதாக புகழ்வேந்தனை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து புகழ்வேந்தன் மற்றும் கள்ளக்காதலி நூர்ஜகானை நேற்று கைது செய்தனர்.

Related Stories: