×

சட்ட விரோதமாக கால்நடைகளை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை; எஸ்பியிடம் புகார் மனு

திருவள்ளூர்:  சட்ட விரோதமாக கால்நடைகளை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பா.சிபாஸ் கல்யாணிடம், சிவசேனா கட்சிபின் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன் விவரம் வருமாறு, சமீப காலமாக தமிழகத்தில் இருந்து மாடுகள் அண்டை மாநிலத்திற்கு விதிமுறைகளை மீறி கடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர எல்லை வழியாக கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களில் தொடர்ச்சியாக விதிமீறல்கள் நடந்து வருகிறது. இது போன்ற கால்நடைகளை வாகனங்களில் கடத்தி செல்பவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்களாகவும், மாற்று மதத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளார்கள்.

கடந்த 29-6 -2022 அன்று உயர்நீதிமன்றம் ஆணையின்படி கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கும் படி மாநில காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறை சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கால்நடைகள் கடத்தல் தொழிலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் கால்நடைகள் ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல் வாகனத்தின் உரிமையாளர், ஓட்டுநர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்பி அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags : SP , Action against illegal cattle smugglers; Complaint petition to SP
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்