×

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா: 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.   

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் 25/08/2022 முதல் 11/09/2022 வரை இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், பாண்டிச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஒரியூர் மற்றும் பட்டுக்கோட்டை  ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆக மொத்தம் 750 சிறப்பு பேருந்துகள் 25/08/2022 முதல் 11/09/2022 வரை இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இது தவிர குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பேருந்து இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Tags : Agri Holy Mother's Wellness Mata temple festival , Velankanni Holy Mother Arogya Mata Temple Festival: Operation of 750 Special Buses
× RELATED அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள...