சீதப்பாலில் தாடகை மலை அடிவாரத்தில் வேட்டு வைத்து பாறைகள் தகர்ப்பு: வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்: சீதப்பால் தாடகை மலைஅடிவாரத்தில் பாறைகள் வேட்டு வைத்து  தகர்க்கப்பட்டது குறித்து வனத்துறை மற்றும் வருவாயத்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரியில் ஜல்லி கல், மண்ணிற்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. தற்போது தேவைக்காக 2 குவாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில பகுதிகளில் திருட்டுத்தனமாக குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தேங்காய்பட்டிணம் பகுதியில் திருட்டு குவாரியை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே காப்புக் காடான தாடகை மலை அடிவாரத்தில் திருட்டுத்தனமாக பாறைகள் மற்றும் மண்ணிற்காக வேட்டு வைப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதியம் பலத்த சத்ததுடன், வெடிக்கும் சத்தம் இருமுறை கேட்டது. இதனை தொடர்ந்து பலத்த புகை மண்டலம் கிளம்பியது.

இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர், கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றதை அடுத்து, மாவட்ட வனஅலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம் உத்தரவின் பேரில் தோவாளை தாசில்தார் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: