×

மேலக்குறிச்சி -பெரியநெசலூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு சாலை உள்ளது. இந்த சாலை பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பி விடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் சாலை பராமரிப்பு பணி ஏதும் நடைபெறாமல் இருப்பதால் அவ்வழியே செல்லும் சிறுவர்கள், முதியோர்களும், வாகன ஓட்டிகளும்  கரடுமுரடான சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே அரசு அதிகாரிகள் மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Melakurichchi-Periyanesalur road , Request for repair of Melakurichchi-Periyanesalur road
× RELATED தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்...