×

குமுளி மலைச்சாலையில் விழுந்த மரம்; போலீசார் அகற்றினர்

கூடலூர்: மழையால் குமுளி மலைச்சாலையில் விழுந்த மரத்தை போலீசார் அகற்றி சாலை போக்குவரத்தை சீர்செய்தனர். தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியானது தேனி - கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள லோயர் கேம்ப்பிலிருந்து ஆறு கிமீ தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலை செல்கிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்வதற்கு கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி என மூன்று வழித்தடங்கள் இருந்தாலும், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியாகவே செல்கின் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன்படி நேற்று இப்பகுதியில் பெய்த தொடர் மழையால், லோயர் - குமுளி மலைச்சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதுகுறித்து தகவலறிந்த எஸ்ஐ அல்போன்ஸ்ராஜா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற லோயர் போலீசார் இயந்திரங்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரத்தினை வெட்டி அகற்றி வாகன போக்குவரத்தை சீர்செய்தனர்.  இந்த பணிகளுக்காக இந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Tags : Gumuli , A fallen tree on Kumuli Hill Road; Police removed
× RELATED விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில்...