தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த விஜயகாந்த், அரசியலில் கால் பதித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். இன்று பிறந்தநாள் காணும் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எம்.பி., பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில்,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்  உடல் நலம் பெற்று, துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கனிமொழி எம்.பி.:

திமுக எம்.பியும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி, தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், தனது 71-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் எனதருமை நண்பரும், கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். விஜயகாந்த் அவர்கள் நல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கட்பணியாற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி:

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: