தி.மலை மாவட்டம் செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து ஜாதி ரீதியாக திட்டிய பாஜக பிரமுகர் கைது..!!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்து, ஜாதி ரீதியாக திட்டியதாக பாஜகவை சேர்ந்த பரசுராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த தொழுப்பேடு ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் நடந்தது. குழம்பாடியில் நடந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் துரை பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த பரசுராமன், ஊராட்சி மன்ற தலைவர் துரையை ஜாதி ரீதியாக இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவரான துரையை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கிராம மக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கும் பூட்டு போட்டு அராஜகம் செய்துள்ளார். இது தொடர்பாக துரை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பரசுராமனை கைது செய்தனர். அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவுப்படி வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: