×

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் ரூ.5.7 கோடியில் சாலை மேம்பாட்டு பணி தீவிரம்

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோத்தகிரி நகரம், கொடநாடு சாலை, வெஸ்ட் புரூக், கண்ணேரிமுக்கு, வார்விக்  எஸ்டேட், கொணவக்கரை ஜங்ஷன், அரவேனு சாலை, குன்னூர் சாலையில் சைக்கிள் பாலம் பகுதி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் ஆபத்தான இடங்களை கண்டறிந்தும், பேரிடர் காலங்களில் இயற்கை சீற்றங்களால் மண் சரிவு ஏற்படும் இடங்களையும் ஆய்வும் செய்தனர். இந்த இடங்களில் தற்போது சாலையோர தடுப்பு, சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் மழைக்காலங்களில் அதிக இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு, மரங்கள் விழுந்து பல இடர்பாடுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் தற்போது பெருகி வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை ஈடுகட்ட ஏற்றவாறும், மலைப்பாதையில் ஏற்படும் அதிக அளவிலான விபத்துக்களை கட்டுப்படுத்தவும் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் மற்றும் சாலையோர தடுப்பு பணிகள், கொடநாடு சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலையோர தடுப்பு பணிகள், கண்ணேரிமுக்கு சாலையில் ரூ.1 கோடி மதிப்பில் குன்னூர் சாலையில் சைக்கிள் பாலம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம்,

சாலையோர தடுப்பு பணி, கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையில் வார்விக் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சாலையோர தடுப்பு, சாலை விரிவாக்கம் மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆபத்தான வளைவுகள், மிகக்குறுகிய வளைவுகளில் விபத்துகளை கட்டுப்படுத்த உயர் வேகத்தடை அமைக்கும் பணிகளும் என  மொத்தம் ரூ.5.7 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ், சாலை ஆய்வாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணன், சிவக்குமார், சேகர் ஆகியோர் தலைமையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Kotagiri , 5.7 crores road development work is intensive in Kotagiri area
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்