×

வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும்போது உரிமையாளருக்கு லைசென்ஸ் உள்ளதா என பார்க்க வேண்டும்: காப்பீடு நிறுவனங்களுக்கு விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் அறிவுரை

சென்னை: சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு சகோதரர் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். திருவள்ளூரை அடுத்த சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனநீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Accident Compensation Tribunal , Advice on vehicle insurance, owner's license, insurance companies, accident compensation tribunal
× RELATED சென்னையில் பயணி கீழே இறங்கும் முன்னரே...