தொலைதூர கல்வி செமஸ்டர் தேர்வு செப்.3ல் தொடக்கம்: சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை பல்கலைக்கழக தொலைத்தூர கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 3ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை www.ideunom.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் இருந்து இன்று (வியாழன்) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தேர்வுக்கான அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்களையும் தேர்வர்கள் இணையதளம் வாயிலாக  அறிந்து கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: