×

பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் மொமோட்டாவை வீழ்த்தி அசத்தினார் எச்.எஸ்.பிரணாய்: லக்‌ஷியா முன்னேற்றம்

டோக்கியோ: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீரர் கென்டோ மொமோட்டாவை வீழ்த்தி அசத்தினார். 2வது சுற்றில் நடப்பு தொடரின் 2ம் நிலை வீரரான கென்டோவுடன் நேற்று மோதிய பிரணாய் 21-17, 21-16 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றார். கென்டோவுடன் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ள பிரணாய் முதல் முறையாக வெற்றியை வசப்படுத்தி அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மோதிய 7 போட்டிகளில் மொமோட்டாவுக்கு எதிராக அவர் ஒரே ஒரு கேம் மட்டுமே வென்றிருந்தார்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் லக்ஷியா சென் 21-17, 21-10 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் லூயிஸ் பெனால்வரை வீழ்த்தினார். இப்போட்டி 72 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் பரபரப்பான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய் - லக்‌ஷியா சென் மோதுகின்றனர். கடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், நேற்று தனது 2வது சுற்றில் சீனாவின் ஸாவோ ஜுன் பெங்கிடம் 18-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் - துருவ் கபிலா ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி தோல்வியை சந்தித்தது.

Tags : HS ,Pranai ,Momota ,Badminton World Championship ,Lakshya , HS Pranay stuns Momota at Badminton World Championships: Lakshya on the move
× RELATED இந்தோனேசியா மாஸ்டர்ஸ் கிடாம்பி, பிரணாய் அதிர்ச்சி தோல்வி