×

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு.!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த 2வது உடற்கூறாய்வு அறிக்கை மட்டும் மாணவி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அந்த அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு ஸ்ரீமதியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி இன்று ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தார். ஆய்வறிக்கையின் நகலை பெற செல்வியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.

உடற்கூறு ஆய்வறிக்கை இரண்டு மட்டுமே வழங்கபட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்பராணி மறுப்பு தெரிவித்துள்ளார். 29 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை வருவதால் அன்றைய தினம் மனு தாக்கல் செய்து பெற போவதாக ஸ்ரீமதியின் தாயார் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் பேட்டி அளித்தார். முதலமைச்சரை சந்திக்க தொழில் துறை அமைச்சர் சி.வி. கனேசன் அனுமதி வாங்கி தருவதாக கூறியுள்ளதால் நடைபயணம் மேற்கொள்வது திட்டம் ரத்து செய்யபடுவதாகவும் அறிவித்துள்ளார்.

Tags : Viluppuram ,JIPMER Medical Court ,Kolakkuruchi , The Villupuram court refused to issue the report of the JIPMER medical team regarding the death of the Kallakurichi student.
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...