×

'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் உள்ளார்; வதந்தி பரப்பாதீர்': பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்..!!

சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அதுகுறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிறந்தநாளையொட்டி நாளை கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருவார் என்றார். அவரை தொண்டர்கள் சந்திக்கலாம் என்றும் பிரேமலதா தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் தேமுதிக குரல் கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் 70 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Tags : Vijayakanth ,Treasurer ,Praemalata Vijayakanth , Vijayakanth Health, Rumours, Premalatha Vijayakanth
× RELATED லயன்ஸ் சங்க கூட்டம்