×

சென்னை முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு காணிக்கையாக வெள்ளித் தொட்டில் மற்றும் பாலமுருகன் வெண்கல திருவுருவ சிலை.!

சென்னை: சென்னை கந்தக்கோட்டம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயிலுக்கு வெள்ளித் தொட்டில் மற்றும் பாலமுருகன் வெண்கல திருவுருவ சிலை காணிக்கையை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, திருக்குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் புதுப்பித்தல், திருக்குளம் புனரமைப்பு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், உபயதாரர்கள் பங்களிப்புடன் பல்வேறு திருக்கோயில்களில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் இன்று (24.08.2022) சென்னை, கந்தக்கோட்டம் அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயிலுக்கு சென்னை, கண் மருத்துவர் டாக்டர் பி.எஸ்.முருகன் குடும்பத்தினர் ரூ.4,82,524/-  மதிப்பீட்டிலான 6,906 கிராம் எடை கொண்ட வெள்ளித் தொட்டில் மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டிலான 6 கிலோ எடை கொண்ட பாலமுருகன் வெண்கல திருவுருவ சிலை ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., சென்னை மண்டல இணை ஆணையர் திரு.ந.தனபால், துணை ஆணையர் திருமதி கவேனிதா, உதவி ஆணையர் திரு.பாஸ்கரன், செயல் அலுவலர் திரு.கொளஞ்சி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : Balamurugan Bronze Thiruvuruva Statue ,Chennai Muthukumara Swami Temple , Silver cradle and bronze idol of Balamurugan as gift to Muthukumara Swamy Temple, Chennai.
× RELATED சென்னை முத்துக்குமார சுவாமி...