×

பதிவில்லாமல் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.வி. கணேசன் எச்சரிக்கை

சென்னை: பதிவில்லாமல் இயங்கும் பட்டாசு தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். முறையாக பட்டாசு தயாரிக்கப்டுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அடுத்த வாரத்தில் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.  குடிசை தொழிலாக பட்டாசு தயாரிக்கும் இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் உத்தரவை கடைபிடிக்காத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Minister ,C. CV Ganesan , TN govt, TN minister, CV Ganesan
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...