×

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்: குஷ்பு கருத்து

சென்னை: பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் உயிருக்கு பயந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்ய கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் அவமானமாகும். பில்கிஸ் பானு மட்டுமல்லாமல் வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு, அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Pilkis ,Kushbu , Bilgis Banu case acquittal is a disgrace to humanity: Khushbu
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்