×

ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலைக்கு பழிக்கு பழியாக இருவர் சரமாரி வெட்டி கொலை; போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலைக்கு பழிக்கு பழியாக இருவருக்கு சரமாரி வெட்டி கொன்றனர். தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் கூலி தொழிலாளி. இவரது மகன் தேவா என்கிற தேவேந்திரன் (25). இவன், அதே பகுதியை சேர்ந்த 4  நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளான். மேலும் அடிக்கடி இரவில் செல்பவர்களிடம் பணம், செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இரவு முதல் தேவேந்திரன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவனது, தந்தை பஞ்சாட்சரம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மணிமங்கலம் காவல் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல் தளத்தில் தேவேந்திரன் வெட்டி கொலை செய்யபட்டு சடலமாக இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசாரின் விசாரணையில் தேவா, கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து மணிமங்கலம் பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளான். இதில் ஏற்பட்ட மோதலில் தேவாவின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொலையில் ஈடுபட்ட மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (23), சுகன் (எ) சுரேந்தர் (20), புளிமூட்டை (எ) சதிஷ் (20), சுதாகர் (21), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (22) என்பது தெரியவந்தது. அதன்படி 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த விக்கி (எ) விக்னேஷ் (23), சுகன் (எ) சுரேந்தர் (20) ஆகிய இருவரும் சுற்றி திரிந்துள்ளனர். நேற்று இரவு மணிமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் மடக்கி கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழிந்துள்ளனர். இதனைகண்ட மர்ம கும்பல் தப்பி ஓடியது. பின்னர் தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Sriperumbudur , In Sriperumbudur, two men were hacked to death in retaliation for the murder of a teenager; The police have registered a case and are investigating
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...