ஊத்துக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கல்வெட்டு திறப்பு; அமைச்சர், எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கல்வெட்டு திறப்பு விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் டி.ஜெ.கோவிந்தராஜன்  எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். ஊத்துக்கோட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பெயர் பதிந்த கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.  இதில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல்,  செயல் அலுவலர் மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட  பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வாழ்த்துரை வழங்கினார். பின்னர்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், திமுக  கவுன்சிலர்கள் அபிராமி, ஆப்தாப்பேகம், சமீமா, இந்துமதி, கல்பனா, சுமலதா, கோகுல்கிருஷ்ணன், கோல்டு மணி, ஜீவா அதிமுக கவுன்சிலர் ஆனந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: