×

ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி; பொதுமக்கள் புகார்

ஆவடி: ஆவடி மாநகராட்சி உட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் போதிய குடிநீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பொன்னியம்மன் கோயில் தெருவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு 1000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த தண்ணீர் சேதமடைந்தது.
மேலும் அங்கிருந்த மின் மோட்டார் பழுதானதுடன், மின்சார கம்பிகள் அறுந்தது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் உப்பு தண்ணீரை பருகி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் உபாதைகள் வரும் அபாயமும் உள்ளது. மேலும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். எனவே ஆவடி பொன்னியம்மன் கோயில் தெருவில் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Avadi Ponniyamman ,Koil Street , Avadi Ponniyamman Koil Street lacks basic amenities; Public complaint
× RELATED தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை...