பவானியம்மன் கோயிலில் சிறுமியிடம் செயின் பறிப்பு; பெண் கைது

பெரியபாளையம்: பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானியம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதம் தொடங்கி 14 வாரங்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சென்னை விம்கோ நகரை சேர்ந்த பிரதீப் என்பவர் தனது குடும்பத்துடன் பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு நேர்த்திக்கடனை செலுத்த வந்தார். அப்போது தனது மகள் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சிறுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையை சேர்ந்த கீதா என்ற பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: