போதைப்பொருள் தடுப்பு குறித்து ஆவடியில் வாகனங்களுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர்; கமிஷனர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி ஆணையரக நுழைவு வாயிலில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதையடுத்து ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆணையத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய வாயலில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருசக்கரவாகனம், ஆட்டோ, கார், பஸ் மற்றும் லாரி என அனைத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்துகொண்டு வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். இதையடுத்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி, போலீசார் இருசக்கர வாகன பேரணி ஆகியவை நடத்தப்பட்டது. நேர்று வாகனத்தில் போதைப்பொருட்களை தடுக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் மகேஷ், சைபர்கிரைம் கூடுதல் துணை ஆணையர் கங்கைராஜ், உதவி ஆணையர் உளவுத்துறை ரமேஷ், செய்தித்தொடர்பாளர் கருணாகரன், உதவி ஆணையர் குற்றவியல் ஆவணகாப்பகம் அர்னால்டு, உதவி ஆணையர் புருஷோத்தமன், முத்துவேல் பாண்டி, ஆய்வாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: