×

புதுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் பூசாரி வெட்டிக்கொலை

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பந்துவக்கோட்டை செல்லியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. பூசாரி கணேசன்(60) முன்னின்று நடத்தி வந்தார். கணேசனுக்கும், அவரது அண்ணன் முத்தையாவின் மகன் சசிகுமாருக்கும் (30) இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. முக்கிய நிகழ்ச்சியான கிடா வெட்டு நேற்று நடைபெற இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு சசிகுமாரை, அவரது சித்தப்பா அழைக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகுமார் போதையில் அரிவாளை எடுத்துக் ெகாண்டு நள்ளிரவில்  கோயிலுக்கு சென்றுபூசாரி கணேசனை வெட்டிக் கொலை செய்தார்.


Tags : Priest ,Pudukottai , Pudukottai, temple festival, priest beheaded
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது