×

பின்லாந்து பெண் பிரதமர் போதை பொருளை பயன்படுத்தவில்லை: பரிசோதனையில் முடிவு வெளியானது

ஹெல்சின்கி: பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின் விருந்தின்போது போதை பொருட்களை பயன்படுத்தவில்லை என்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின். சமீபத்தில் இவர் தனது நண்பர்களுடன் விருந்து ஒன்றில் போதையில் உற்சாகமாக ஆடி, பாடிய வீடியோ வைரலானது. இதனால், அவர் சர்ச்சையில் சிக்கினார். அவர் போதை பொருட்களை பயன்படுத்தி விட்டு விருந்தில் ஆட்டம் போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நாட்டின் பிரதமர் போதை பொருளை உட்கொள்ளலாமா? என விமர்சனங்களும், அவருக்கு எதிராக கண்டனங்களும் வலுத்தது. ஆனால், தான் மது மட்டுமே அருந்தியதாகவும், போதை பொருளை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மரின் மறுத்தார். மேலும், போதைப்பொருள் பரிசோதனைக்கு தயார் என்றும் அறிவித்தார். இதனை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி அவருக்கு போதை பொருள் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கையை பிரதமர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில், ‘பிரதமர் சன்னா மரினின் சிறுநீர் மாதிரியில் ேகாகைன் உட்பட பல்வேறு போதை பொருட்கள் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.


Tags : Finland , Finland's female prime minister does not use drugs, test results
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...