பாக்.கில் விழுந்த ஏவுகணை விமானப்படையின் 3 அதிகாரி டிஸ்மிஸ்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் பிரதான ஏவுகணையாக பிரம்மோஸ் ஏவுகணை உள்ளது. இந்த ஏவுகணைகளில் ஒன்று, கடந்த மார்ச் 9ம் தேதி தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று விழுந்தது. இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது. இதில், ஏவுகணையை செலுத்துவதற்கான நிலையான இயக்க விதிமுறைகளை விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பின்பற்றவில்லை என்று தெரிய வந்தது.

இந்த தவறுக்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தான் அரசிடம் ‘மிகவும் வருந்தத்தக்கது’ என்று மன்னிப்பு கோரியது. விசாரணையில், அவர்கள் 3 பேருமே இந்த தவறுக்கு பொறுப்பு என்று உறுதியானது. இதையடுத்து,  இந்த 3 அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்து ஒன்றிய அரசு நேற்று உத்தரவிட்டது.

Related Stories: