×

என்டிடிவி பங்குகளை வாங்குகிறார் அதானி

புதுடெல்லி: பிரபல தனியார் செய்தி நிறுவனமான என்டிடிவி.யின் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. கவுதம் அதானி தனது குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு பல்வேறு புதிய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே 5ஜி அலைக்கற்றை ஏலம், இலங்கையில் மின் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருகிறார்.

என்டிடிவி எனப்படும், ‘புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்’ செய்தி ஒளிபரப்பு நிறுவனத்தின் 29.18% பங்குகளை அதானி குழும நிறுவனம் ஏற்கனவே மறைமுகமாக வேறு நிறுவனங்களின் மூலம் வாங்கி விட்டது. தற்போது, அதன் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதை வாங்கினால், என்டிடிவி.யில் 55 சதவீத பங்குகளுடன், அதானி குழுமம் முதன் பங்கு நிறுவனமாக மாறும்.

விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட், ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகியவை, ரூ.4 முகமதிப்பு கொண்ட என்டிடிவி.யின் 1,67,62,530 சம மூலதன பங்குகளை பொது பங்குதாரர்களிடம் இருந்து ரூ.294 என்ற விலைக்கு வாங்குவதற்கு முன்வந்துள்ளன.


Tags : Adani ,NDTV , NDTV, Stock, Adani
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...