×

பல்லடத்தில் பனியன் நிறுவன பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து

பொங்கலூர் : திருப்பூர் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று காலை பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பனியன் தொழிலாளர்ளை ஏற்றிக்கொண்டு திருப்பூரில் உள்ள கம்பெனியை நோக்கி பல்லடம் வழியே சென்றுள்ளது. பேருந்து உடுமலை-பொள்ளாச்சி பிரிவு வடுகபாளையம் பகுதியைக் கடந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து நின்று விபத்துக்குள்ளனாது. விபத்தில் ஓட்டுநர் முருகன் உட்பட்ட 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கிரேன் வரவழைக்கப்பட்டு கட்டிடத்திற்குள் புகுந்து பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

The post பல்லடத்தில் பனியன் நிறுவன பேருந்து கடைக்குள் புகுந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Panyan Company ,Palladam ,Pongalur ,Tirupur ,Banyan Company ,Dinakaran ,
× RELATED விவசாய தோட்டங்களில் மின் வயர்கள் திருட்டு