×

கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் ‘108’ அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார்கள். நோயுற்ற பொதுமக்கள், மருத்துவமனைகளில் சேர்ந்து உடனடியாக மருத்துவ வசதிகளை பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், ‘108’ இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 15.09.2008 அன்று மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது.  அவசர மருத்துவச் சிகிச்சை, தீ விபத்து, சாலை விபத்து போன்ற காலங்களில் பொதுமக்கள் ‘108’ என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு இச்சேவையை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் தற்போது 1,303 அவசரகால ஊர்திகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 27,53,799 கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 1,12,64,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.சமூகப் பொறுப்புணர்வோடு கரூர் வைஸ்யா வங்கி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் 108 இலவச அவசரகால ஊர்தி சேவை பயன்பாட்டிற்காக வழங்கிய, 64 இலட்சத்து 46 ஆயிரத்து 541 ரூபாய் மதிப்பிலான 2 மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் அவசரகால ஊர்திகள்  மற்றும் மலைவாழ் மக்களின் சேவைக்காக, மலைப் பகுதிகளில் செல்லும் வகையிலான ஒரு கோடியே 12 இலட்சத்து 40 ஆயிரத்து 931 ரூபாய் மதிப்பிலான 8 அவசரகால ஊர்திகள், என மொத்தம் ஒரு கோடியே 76 இலட்சத்து 87 ஆயிரத்து 472 ரூபாய் மதிப்பிலான 10 அவசரகால ஊர்திகளின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, அதில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநர் டாக்டர் ச. உமா, இ.ஆ.ப., கரூர் வைஸ்யா வங்கியின் பொது மேலாளர் திரு. கே.வி.எஸ்.எம்.  சுதாகர், மண்டல மேலாளர்கள் திரு. வி. கிருஷ்ணன் மற்றும் திரு. ஆர். கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post கரூர் வைஸ்யா வங்கி வழங்கிய 10 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Karur Vysya ,Chief Minister ,BCE. G.K. stalin ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Shr.M. ,G.K. Stalin ,Tamil Nadu Government's' ,Bank Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தூய்மையான கடற்கரையின் அவசியம்...