×

கொடைரோட்டில் பழுதடைந்த பூ மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

நிலக்கோட்டை : கொடைரோட்டில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்ததால் பழுதடைந்து கைவிடும் நிலையிலுள்ள பூ மார்க்கெட்டை புதுப்பித்து புத்துயிரளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்லில் கொடைரோடு, காமலாபுரம், பள்ளப்பட்டி, சிலுக்குவார்பட்டி, கொளிஞ்சிப்பட்டி, உச்சனம்பட்டி, சடையாண்டிபுரம், ராஜாதாணிக்கோட்டை என சிறுமலை அடிவார பகுதியில் பூக்கள் பயிரிடப்படுவதை பிரதான தொழிலாக இங்குள்ள விவசாயிகள் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் பன்னீர்ரோஸ், பட்டன்ரோஸ், மல்லிகை மற்றும் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக் கொண்டை ஆகிய பூக்களேஅதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பூக்களை அந்தப் பகுதியிலேயே விற்பனை செய்ய பிரத்தியேகமாக அமைக்கபட்டது தான் கொடைரோட்டில் அமைந்துள்ள பூ மார்க்கெட். இந்த காலையில் மட்டும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது.

இந்த மார்க்கெட்டுக்கு மதுரை, சோழவந்தான், தேனி, பெரியகுளம் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் காலை நேரத்தில் கூட்டமாக வந்து மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம்.ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா பரவல் கால முதல் இந்த மார்க்கெட்டின் செயல்பாடு முற்றிலும் முடக்கப்பட்டு தற்பொழுது மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் வெளியூர் வியாபாரிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இப்பகுதி விவசாயிகளும் நிலக்கோட்டை, மதுரை,திண்டுக்கல் மார்க்கெட்களுக்கு பூக்களை நேரடியாக கொண்டு செல்வதால் தினமும் காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கொடைரோடு பூ மார்க்கெட் தற்போது முற்றிலும் முடங்கி கைவிடப்படும் நிலையில் உள்ளதால்,மாவட்ட நிர்வாகம் பேரூராட்சியும் இணைந்து மீண்டும் புதுப்பித்து புத்துயிர் பெற வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ இப்பகுதியில் பூக்கள் பயிரிடப்படுவது தான் பிரதான தொழில். பறித்த பூக்கள் வாடும் அதனை விற்பனை செய்து விட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் எண்ணம். அதற்காக எளிதில் வந்து போகும் நிலையில் தான் கொடைரோடு பூ மார்க்கெட் இருந்தது. சிறுமலையை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் பயிரிடப்படுகிறது.

பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறுமலையிலிருந்து எளிதில் வந்து செல்லும் தொலைவிலும் இந்த மார்க்கெட் உள்ளது. தற்போது இந்த மார்க்கெட்டில் கோரோனா காலத்திற்கு பிறகு வெளியூரில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளின்  எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அனைவரும் மதுரை, திண்டுக்கலில் உள்ள மார்க்கெட்டிற்கு செல்கின்றனர். இங்குள்ள பூமார்க்கெட் சீரமைக்கபட்டால் நேர விரயமின்றி பூக்களை விற்பனை செய்ய முடியும். மேலும் பூக்கள் வாடாமல் இருக்க அதிகம் தண்ணீர் பயன்படுத்தப்படும் என்பதால், புதிதாக அமைக்கப்பட உள்ள பூ மார்க்கெட்டில் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்’’என்றனர்.

Tags : Kodairot , Nilakottai: The flower market in Kodairot has fallen into disrepair and is being abandoned due to a decrease in the number of out-of-town traders.
× RELATED கொடைரோட்டில் பழுதடைந்த பூ...