×

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ இன்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 27ம் தேதிஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இன்று துபாய் புறப்பட்டு சென்றது. வீரர்கள் அனைவரும் உடல் தகுதியுடன் உள்ள நிலையில், அணியின் பயிற்சியாளரான  ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும்.

இது உலகக் கோப்பை தொடருக்கு ஒரு முன்னோட்டமாக விளங்குகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களை வைத்தே , உலக கோப்பை அணியை இந்தியா தேர்வு செய்ய உள்ளது. இதனால் எந்த வீரர்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கேப்டனும், பயிற்சியாளரும் இணைந்தே செயல்பட வேண்டிய சூழ்நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் ஆசிய கோப்பை தொடருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.

2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்த நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் டிராவிட் இணையத்தளம் வாயிலாக அணியின் ஆலோசனை கூட்டம் மற்றும் யோசனைகளை வழங்கலாம். எனினும் அது அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Tags : Indian ,Rahul Dravid , India, cricket team, coach, Rahul Dravid, Corona
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...