×

பெரம்பூர் பகுதியில் குறுவை சாகுபடியில் மேல்உரம் அடிக்கும் பணி தீவிரம்

நீடாமங்கலம் : நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடியில் மேல் உரம் அடிக்கும் பணி மும்முரமாக நடை பெறுகிறது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் மே.24ம் தேதி மேட்டூர் அணை திறந்து விட்டதால், டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிக ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ததால் மண் வளம் பல கிராமங்களில் பாதிப்படைந்துள்ளது. நீடாமங்கலம் தாலுகா பகுதியில் பல்வேறு கிராமங்களில் மண் வளத்தை மாற்றுவதற்கு இந்த ஆண்டு பல கிராமங்களில் கோடை சாகுபடியை விவசாயிகள் நிறுத்தி சில கிராமங்களில் குறைவாகவே சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மட்டும் கோடை சாகுபடி செய்திருந்தனர்.

சில விவசாயிகள் நிலத்தடி நீரில் முன் கூட்டியே ராயபுரம், காளாஞ்சிமேடு, கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, ராயபுரம், மேலபூவனூர், காணூர், அனுமந்தபுரம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடிக்கு தொடங்கிய நிலையில் முன்கூட்டியே சாகுபடி செய்த நெல் பயிர்களில் விவசாய தொழிலாளர்கள் குறுவை சாகுபடி செய்த வயல்களில் மேல் உரம் இடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kurvai ,Perambur , Needamangalam: The work of top dressing is going on in the Kuruvai cultivation in Needamangalam area. Needamangalam, Tiruvarur district.
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது