×

நாகை மீனவர்கள் 10 பேர் கைது...சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்.: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நாகை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை பின்வருமாறு காண்போம்,

* நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேர், வங்கக்கடலில் கோடியக்கரை அருகில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

* தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஆறாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 48 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* சிங்களக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் கூட, அதை சிங்கள அரசு மதிக்கவில்லை. சிங்கள அரசின் அகங்காரத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

* கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 9 பேரையும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள  அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் மீட்டு வர ஒன்றிய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


Tags : Ramdas , 10 naga fishermen arrested... Sinhalese soldiers' encroachment must end: Ramdas insists
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...