×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 24 மணி நேரமும் கண்காணிக்க 5 இருசக்கர ரோந்து வாகனங்கள்-எஸ்பி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணிக்காக 5 இருசக்கர ரோந்து வாகனங்களை எஸ்பி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். எனவே, கிரிவல பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் காவல் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 24 மணி நேரமும் இயங்கும் ரோந்து வாகனமும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. அது தவிர, கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுேவாரை கண்காணிக்க சீருடை அணியாத போலீசாரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.இந்நிலையில், கிரிவலப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்கான கூடுதல் ஏற்பாடாக, 24 மணி நேரமும் இயங்கும் 5 இருசக்கர ரோந்து வாகனங்களை நேற்று மாலை எஸ்பி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி அருகே நடந்த நிகழ்ச்சியில், டவுன் டிஎஸ்பி குணசேகரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்து எஸ்பி கார்த்திகேயன் கூறியதாவது:கிரிவலப்பாதையில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காகவும், விரைந்து குற்றவாளிகளை பிடிக்க வசதியாகவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். அரசு கலை கல்லூரியில் தொடங்கி, அண்ணா நுழைவு வாயில் வரையுள்ள 10 கிமீ தொலைவில், இந்த வாகனங்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடும்.

மேலும், 2 கிமீ தூரத்துக்கு ஒரு வாகனம் என மொத்தம் 5 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடும். இந்த வாகனங்களில் வாக்கி டாக்கி மற்றும் எப்ஆர்எஸ் செயலி கொண்ட மொைபல் போன் இடம் பெற்றுள்ளது என்றார்.



Tags : Thiruvannamalai Kriwalabadi , Thiruvannamalai: SP Karthikeyan has deployed 5 two-wheeler patrol vehicles for security work on Thiruvannamalai Kriwalabadi.
× RELATED சாலையோர மரத்தின் மீது அரசு பஸ் மோதி...