டெல்லி ஜெ.ஜெ காலனியில் மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: 2 பேர் பலியான நிலையில், ஒருவர் படுகாயம்

டெல்லி: டெல்லியில் நள்ளிரவில் ஜெ.ஜெ காலனியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்தப்பட முன்விரோதம் காரணமா? என்பது தெரியவில்லை. எனினும் துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த குடியிருப்பு வாசிகள் போலீஸ் மற்றும் அவசர மருத்துவ சேவைக்கு செல்போனில் அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிசூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பியவர்கள் யார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. நள்ளிரவில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு டெல்லி வாசிகளை அதிற்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து உயிரிழந்தவரின் சகோதரர் வீர் சிங் கூறுகையில், முகமூடி அணிந்த 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனது சகோதரர் உட்பட 3 பேர் பேசிக்கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிசூட்டில் எனது சகோதரர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்தார் என தெரிவித்தார்.

Related Stories: