×

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தல்

ஜெய்பூர்: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றதால், தனது தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அப்போது முதல் இடைக்கால தலைவராக சோனியா பதவி வகிக்கிறார். அவருக்கும் உடல் நல பாதிப்பால் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. இதனால், ராகுல் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராகுலைப் பொறுத்த வரையில் இன்னமும் அவரது மனநிலையை மாற்றிக் கொள்ளவில்லை என இவர்களில் சிலர் கூறுகின்றனர்.

இதனால், கட்சியை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. இந்த சூழல்நிலையில், செப்.20ம் தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்ச் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்பது தான் தொண்டர்களின் விருப்பம். கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Congress ,Rahul Gandhi ,Rajasthan ,Chief President ,Ashok Kelad , Rahul Gandhi should take over as Congress president: Rajasthan Chief Minister Ashok Khelat insists
× RELATED வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து...