×

ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூரில் மரம் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்தன; மின்சாரம் துண்டிப்பு

ஆலந்தூர்: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று  இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் காற்று மழையினால் சாய்ந்த மரங்கள் மின்கம்பிகளை அறுத்து கொண்டு கீழே விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட ஆதம்பாக்கம், டி.என்ஜி ஒ.காலனி, சவுத் செக்டர் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய பெரிய மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் கம்பிகள் அறுந்து தொங்கியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் ஆலந்தூர் குருபக்ஸ் தெரு, சவுரி தெரு போன்ற பகுதிகளில் உள்ள மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும்  ஆலந்தூர், 167வது வார்டுக்கு உட்பட இந்து காலனி 8வது 16வது குறுக்கு லட்சுமிநகர், ஹோல்டால் காலனி போன்ற தெருக்களில் உள்ள மரம் சாய்ந்து மின்கம்பத்தில் உள்ள  மின்கம்பிகளும் அறுந்து விழுந்தது. இங்கு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. தகவலறிந்த ஆலந்தூர் மண்டல குழுத்தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி உதவி கமிஷனர் பாஸ்கரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாஞ்சில் பிரசாத், துர்காதேவி நடராஜன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அறுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : Alandur ,Adambakkam ,Nanganallur , In Alandur, Adambakkam, Nanganallur, trees fell and power lines were cut; Power cut
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு