ஆவடி மாநகராட்சியில் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணனூர் தேவி நகர், பாஷ்யம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு  கனமழை பெய்தது. இதனால் முழங்கால் அளவிற்கு மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது.

அவ்வாறு தேங்கி நிற்கும் மழை நீருடன் கால்வாய் நீரும் சேர்ந்தால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவவாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. எனவே தேங்கிநிற்கும் மழைநீர் அகற்றவேண்டும். மழைக்காலம் வர இருப்பதால் மழைநீர் சாலையில் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: