×

சீனாவை சீண்ட அமெரிக்க ஆளுநர் தைவான் பயணம்

தைபே: தைவான் மீது சீனா ஆத்திரத்துடன் உள்ள நிலையில், அந்நாட்டிற்கு அமெரிக்க ஆளுநர் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா சபாநாயகர் பெலோசி தைவான் சென்றதை கண்டித்து, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தி போர் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால், தைவான்-சீனா எல்லையில் பதற்றமான சூழ்நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் குழு தைவான் சென்று வந்தது. இந்நிலையில், சீனாவை மேலும் வெறுப்பேற்ற, அமெரிக்காவின் இண்டியானா மாகாண ஆளுநர் எரிக் ஹோல்காம்ப், 4 நாள் பயணமாக தைவானுக்கு நேற்று முன்தினம் வந்தார்.

அவர், தைவான் அதிபர் சாய் இங்-வெனை சந்தித்து பேசினார். அப்போது, பொருளாதார பரிமாற்றங்கள் மற்றும் செமிகண்டக்டர்கள் குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே, பெலோசி வந்து சென்றிருந்தே அமெரிக்க, சீனா இடையே மோதல் நிலவு வரும் நிலையில் ஆளுநர் ஒருவர் சந்தித்து பேசி இருப்பது மீண்டும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், ஜப்பான் எம்பிக்கள் கெய்ஜி புருயா மற்றும் மினோரு கிஹாரா ஆகியோர் நேற்று தைவானுக்கு வந்துள்ளனர். அவர்கள் இன்று தைவான் அதிபர் சாய் இங்-வெனை சந்தித்து பேச உள்ளனர்.



Tags : US ,Taiwan ,China , US governor visits Taiwan after angering China
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...