×

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பூந்தமல்லி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இங்கிருந்து சென்னை நகர மக்களுக்கு நாளொன்றுக்கு குடிநீர் சுத்திகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஏரிக்கு நீராதாரமான ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் ஏரிகளும் நேற்றுமுன்தினம் இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. இதனால் நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 22.70 அடி. அதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது 608 கன அடி நீர்வரத்து உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வருவதும் குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த மழையில், செம்பரம்பாக்கம் ஏரியில் 39 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் காற்றின் வேகம் அதிகரிப்பினால், அலைகள் அதிகரித்து கரைமீது மோதிவி கடல் போல் அழகுற காட்சியளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்தளும்பி வருவதை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Tags : Chembarambakkam lake ,Chennai , Increase in water flow to Chembarambakkam lake which supplies drinking water to Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...