பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்; எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் 15 அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் சார்பில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ இலவச சைக்கிள்களை வழங்கினார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ்டு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அனைத்து அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பிளஸ்டு படித்து வரும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை, வங்கனூர் ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு திருத்தணி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மணிமேகலை, பாண்டியன், கோமதி, தாமோதரன், ஜெயச்சந்திரன், தேவசஹாயம், நிர்மலாதேவி, பாரதி ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளி துணை ஆய்வர் வெங்கடேசுலு, ஆர்.கே.பேட்டை ஒன்றிய செயலாளர்கள் பி.பழனி, சி.என்.சண்முகம், ஒன்றிய குழு துணைத் தலைவர் திலகவதி ரமேஷ், அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர்கள் தனலட்சுமி காளத்தீஸ்வரன், உமாபதி,  பிரமிளா வெங்கடேசன், செல்வி சந்தோஷ், சிவக்குமார்,  பெற்றோர் ஆசிரிய கழக தலைவர்கள் எஸ்.ஆர்.செங்குட்டுவன், கே.எம்.சுப்பிரமணி, சி.சுப்பிரமணி, கோவிந்தசாமி, சி.ஜி.சண்முகம், எம்.கே.சுப்பிரமணி, எம். ஜோதிகுமார், சி.ஜெ. செந்தில்குமார், டி.ஆர்.கே.பாபு, ஓ.ஏ.நாகலிங்கம் பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர் மணிமேகலை, பேரூராட்சி துணைத் தலைவர் எம்.ஜோதிகுமார் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருத்தணி: திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.ஜி. கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் அருளரசு தலைமை வகித்தார். முன்னதாக பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் குமரவேல் அனைவரையும் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர்கள் தீபாரஞ்சினி, குமுதா, சண்முகவள்ளி, பிரேமா, ஷியாம் சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவர் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். மொத்தம், 932 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டன. மேலும் கல்வி மண்டல அளவில் நடைபெறும் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, ஜீ.எஸ்.கணேசன், ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள் அமுதா, பாலசுப்பிரமணியம், ஆசிரியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: