×

கிரிப்டோ கோப்பை செஸ்; பிரக்ஞானந்தா 2வது இடம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார்

மயாமி: அமெரிக்காவில் நடந்த கிரிப்டோ கோப்பை செஸ் தொடரின் கடைசி சுற்றில், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய நட்சத்திரம் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார். புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்த கார்ல்சன் (நார்வே) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்ற இந்த தொடரின் 7வது மற்றும் கடைசி சுற்றில் கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா 4 ரேப்பிட் ஆட்டங்களின் முடிவில் 2-2 என சமநிலை வகித்ததால் டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் பிரக்ஞானந்தா அபாரமாக வென்றாலும், மொத்த புள்ளிகள் அடிப்படையில் கார்ல்சன் (16 புள்ளி) முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரக்ஞானந்தா (15 புள்ளி) 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை அவர் இந்த ஆண்டில் 3வது முறையாக வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஈரான் வீரர் அலிரெஸா பிரோஸ்ஜா (15 புள்ளி) 3வது இடம் பிடித்தார்.


Tags : Carlsen , Crypto Cup Chess; Pragnananda 2nd: Beats Carlsen again
× RELATED கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ்...