ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன்: அர்ஜூன மூர்த்தி பேட்டி

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன் என்று அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். பாஜவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் அர்ஜூன மூர்த்தி. இவர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்றார். ரஜினிகாந்த் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கி அர்ஜூன மூர்த்தி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் மீண்டும் இணைந்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘மீண்டும் பாஜவில் சேர்ந்துள்ளேன். ரஜினியின் ஆசிர்வாதத்துடன் தான் பாஜவில் மீண்டும் இணைந்துள்ளேன். வேகம், வீரியம் மிக்கவராக அண்ணாமலை இருக்கிறார். ரஜினியிடம் தெளிவான சிந்தனை, தொலை நோக்கு பார்வை இருந்தது. ரஜினி ஒரு கருத்தை கூற நினைத்தால் அதை வெளிப்படையாக கூறிவிடுவார்’’ என்றார்.

Related Stories: