×

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், எண்ணி ஏழு நாள் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ஏறக்குறைய ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தனர். இந்த கடன்தொகையை திரும்பச் செலுத்தாமல், தொடர்ந்து படம் எடுத்ததையடுத்து,  திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ரூ.1.3 கோடிக்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags : Lingusamy ,Chennai Saidappet , Check forgery, Director Lingusamy, 6 months imprisonment, Chennai, Saidapet Court
× RELATED பையா ரீ-ரிலீஸ் மகிழ்ச்சி அளித்திருக்கிறது: கூறுகின்றனர் கார்த்தி, தமன்னா