×

மின் கட்டண உயர்வு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்: தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு மினசார ஒழுங்கு முறை சார்பில் மின்கட்டண உயர்வு குறித்து பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் 8 ஆண்டுக்கு பின் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மின்கட்டண உயர்வால் வீட்டு வாடகை, கடை வாடகை மற்றும் சிறு குறு தொழில்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தற்போது  மக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேச விரும்பும் பொதுமக்கள் காலை 9 மணி முதல் 10.30மணி வரை தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, பொதுமக்கள் பதிவு செய்து தற்போது கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வீரமணி, உறுப்பினர் வெங்கடேசன், சந்திரசேகர் ஆகியோர் மின்னிலையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், தொழில்சங்க பிரநிதிகள், சிறு குறு தொழில் நிறுவனங்களின் பிரநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் 200 யூனிட்களுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்தி வருபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27-ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றுக்கு ரூ.72-ம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல், இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்கள் வரை மின்நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீடுகளுக்கு, மாதம் ஒன்றிற்கு ரூ.147.5 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 2.3 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகர்வோரில், 1 கோடி நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 100 யூனிட் வரையிலான இலவச மின்சார தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுமக்களிடமும், பிரநிதிகளிடமும் கருத்து கேட்டுக்கும் கூட்டமானது கலைவாணர் அரங்கில் நடந்து வருகிறது.


Tags : TN Nadu Electricity Regulatory Authority , tariff, rise, opinion, meeting, tamilnadu, electricity, regulation, commission, arrangement
× RELATED மின் கட்டண உயர்வு குறித்து...