தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய நிறுவன பணியாளர்கள் பணி நிபந்தனை விதிகளின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி, ம.பி.யை சேர்ந்த ஜகத்குரு ராமநாதாச்சார்யா சுவாமி ராம்பத்ராச்சார்யா ஸ்ரீ துளசி பீட சேவா நியாஸ் மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூருவைச் சேர்ந்த 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்றுதலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான விசாரணைக்கு வந்தது. அப்போது; தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்க உத்தரவிட்டு அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகள் முடித்துவைக்கப்பட்டது.

Related Stories: