மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல் ஓபிஎஸ் மேற்கொள்வது தர்ம யுத்தம் அல்ல துரோக யுத்தம்

எட்டயபுரம்:  தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரத்தில் நகர அதிமுக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ்சின் நிலைப்பாட்டால் அதிமுக செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது. தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் பிரசாரத்திற்கு செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வரும் போது வழக்கம் போல மவுன யுத்தம் துவங்கினார்.

எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தை தொடங்குவார். மேலும் அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஆனால், அவர் மேற்கொள்வது தர்மயுத்தம் அல்ல துரோக யுத்தம். அவரது யுத்தங்கள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஒரு போதும் வெற்றி தராது. இருப்பினும் பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். விலாசத்தை தொலைத்தவர்கள் தான் ஓ.பி.எஸ் பக்கம் செல்கின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது என்றார்.

Related Stories: