×

ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க சட்ட திருத்தம் சிங்கப்பூர் அறிவிப்பு

சிங்கப்பூர்: ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக மாற்ற அரசியலமை ப்பு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப் போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அறிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், வருடாந்திர தேசிய தினப் பேரணியில் பேசுகையில், ‘‘ஒரே பாலின சேர்க்கையை குற்றமாக கருதும் காலனித்துவ கால சட்டத்தை ரத்து செய்வது இப்போது சரியானது என கருதுகிறேன். ஏனெனில் பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன். ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை அரசு திருத்தம் செய்யும். இதற்காக சட்டப்பிரிவு 377ஏ-ஐ ரத்து செய்வோம்’’ என அறிவித்துள்ளார்.

Tags : Singapore , Homosexuality, Law Amendment, Singapore
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...