முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் நடத்தும் பள்ளியின் குழந்தைக்கு பாலியல் தொல்லை: அரியானா போலீசார் விசாரணை

ஜஜ்ஜர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் நடத்தும் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அரியானா மாநிலம் ஜஜ்ஜரில் சர்வதேசப் பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பள்ளியின் நிறுவனராகவும், அவரது மனைவி ஆர்த்தி தலைவராகவும் உள்ளார். இந்தப் பள்ளியின் விடுதிகளில் ஏராளமான குழந்தைகள் தங்கிப்படித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பள்ளியில் படித்து வரும் 3ம் வகுப்பு குழந்தையின் தந்தையும், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்தவருமான ஒருவர், ஜஜ்ஜர் போலீஸ் எஸ்பி வாசிம்  அக்ரமைச் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

அதில், ‘கடந்த 15ம் தேதி இரவு எனது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அந்த செயலை பள்ளியின் ஊழியர்கள் செய்துள்ளனர். எனது குழந்தை எங்களிடம் தெரிவிக்க பயந்தது. மருத்துவ பரிசோதனையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து போக்சோ  சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளியில்  தடயவியல் குழுவினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: