தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மண்டிக்கிடக்கும் செடி,கொடிகள் அகற்ற வேண்டும்: மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் பாம்புகள் புகுந்து வருகிறது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள செடி கொடிகளை அகற்றாததால் வீட்டிற்குள் விஷப் பாம்புகள் புகுந்து வருகிறது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏ, பி, சி, இ, ஆகிய வரிசைப்படி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளன. சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான புல் பூண்டுகள் செடி கொடிகள் அதிகமாக மண்டி கிடக்கின்றன. இதனால் கொசு தொல்லைகளும் விஷக்கிருமிகளும் அதிகம் ஊர்ந்து வருகின்றன.

குறிப்பாக அதிக விஷம் உள்ள பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து வருவது வழக்கமாக உள்ளது. கீழ்தளத்தில் உள்ள வீடுகளில் பாம்புகள் ஊர்ந்து வருவது அதிகமாக உள்ளன என்று அங்கு வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர். இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே அப்பகுதியில் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகள் ஹவுசிங் போர்டு நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: